விஜய் படம் வெளியாகும் போது
அஜித் ரசிகர்கள்
ஒரு விமர்சகரை ஆதரிக்கிறார்கள் என்றாலும், அஜித் படம் ரிலீஸ் ஆகும் போது விஜய் ரசிகர்கள் ஒரு விமர்சகரை ஆதரிக்கிரார்கள் என்றாலும் அது ப்ளு சட்டை மாறனாக தான் இருக்க முடியும். அந்தளவிற்கு பாகுபாடு இல்லாமல் அனைத்து படங்களையும் வச்சு செய்ப்பவர் மாறன்.
இந்நிலையில் அண்மையில் ‘
வலிமை
‘ படத்தை மாறன் விமர்சனம் செய்தது பலவிதமான சர்ச்சைகளை கிளப்பியது. எச். வினோத் இயக்கத்தின் போனி கபூர் தயாரிப்பில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அஜித்தின் ‘வலிமை’.
‘வலிமை’ படத்தை ஈவு, இரக்கம் இல்லாமல் கழுவி ஊத்தினார்
ப்ளூ சட்டை மாறன்
. படத்துல கதைன்னு ஒன்னு இல்லவே இல்லை. அஜித்தோடு லுக்கும் பழைய இந்தி பட ஹீரோ மாதிரி இருக்காரு. இதெல்லாம் ஒரு படம்ன்னு கல்யாண வீடு, எழவு வீடுன்னு எல்லா இடத்துலயும் ‘வலிமை’ அப்டேட் கேட்டுட்டு இருந்தான்ங்க என சகட்டுமேனிக்கு விமர்சித்திருந்தார் ப்ளூ சட்டை மாறன்.
தனுஷுக்கு ‘நச்’ பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா: பாராட்டி தள்ளும் ரசிகர்கள்..!
அவரின் இந்த விமர்சனத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அஜித்தை உருவக்கேலி செய்துள்ளதாக பலரும் ப்ளூ சட்டை மாறனுக்கு கண்டனம் தெரிவித்தனர். திரையுலகை சார்ந்த சிலரும் மாறனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் இதையெல்லாம் சட்டை செய்யாத மாறன் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வலிமை’ படத்தை விமர்சித்தும், அஜித் ரசிகர்களின் செயலை கலாய்த்தும் பதிவுகள் பகிர்ந்து கொண்டே வந்தார். இந்நிலையில் பிவிஆர் சினிமாவில் படம் பார்க்க சென்ற ப்ளூ சட்டை மாறனை அஜித் ரசிகர்கள் சிலர் தாக்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலிமையை மிஞ்சுமா ET? கே ராஜனுடன் சிறப்பு நேர்காணல்!