தண்ணீர் தொட்டில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். வீட்டில் விளையாடி கொண்டிருந்த தர்னீஸ் திடீரென காணமல் போனதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை அக்கம்பக்கதில் தேடியுள்ளனர். அப்போது, வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் தர்னீஸ் தவறி விழுந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.