ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய பயணி ஆல்பத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘வாழ்த்துகள் தோழி’ என்று நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.
ஐஸ்வர்யாவும், தனுஷும் 15 ஆண்டுகளுக்கும் மேலான திருமண பந்தத்திலிருந்து விலகுவதாக இருவரும் பரஸ்பரம் அறிவித்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இருவரின் பிரிவையும் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், ஐஸ்வர்யா இயக்கியுள்ள ‘பயணி’ என்ற இசை ஆல்பம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது.
இந்த ஆல்பத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தனது தோழிக்கு வாழ்த்துகள் என்று தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் தனுஷின் ட்வீட்டுக்கு ரசிகர்கள் சிலர் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாறனுக்கு ட்விட்ஸ்ட் கொடுத்த மாயன்… இதை நாங்களே எதிர்பார்க்கலையே..
எதிர்மறை கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இதுல வந்து கருத்து சொல்ல இங்க யாருக்கும் உரிமை இல்ல, உங்க குடுபத்துல இருக்க பிரச்சனைய பாருங்க என்று ரசிகர்கள் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
”ஐஸ்வர்யா தனது பெயருக்கு பின்னால் தனுஷ் என்றே குறிப்பிட்டுள்ளார். விவகாரத்துக்கு பிறகும் அவர்கள் தங்களது பணிகளை செய்து வருகின்றனர். நாம் நமது வேலைகளில் கவனம் செலுத்துவோம்” என்று மற்றொரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“