தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் டிஆர்பி பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது போலவே இந்த முறையும் காகிதம் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தார். செயின்ட் ஜார்ஜ் கோட்டை கோட்டையில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
எம்எல்ஏக்கள் இருக்கைகளும் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் கணினியில் பட்ஜெட் விவரங்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கலை எல்லாரும் பார்க்கும் வகையில் சட்டப்பேரவையில் பெரிய திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. திருக்குறள் உடன் அவையை தொடக்கி வைத்தார் சபாநாயகர் அப்பாவு. சற்றுமுன் நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை வாசித்து வருகிறார்.