தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. திருக்குறள் உடன் அவையை தொடக்கி வைத்தார் சபாநாயகர். தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும்.
இலவச பேட்டரி வாகனங்கள்!
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக உள்நாடு, சா்வதேச முனையங்கள் இடையே இயக்கப்படும் இலவச பேட்டரி வாகனங்கள், தற்போது அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் விரிவு செய்யப்பட்டுள்ளது
பெகாசஸ் விவகாரம்: மம்தா குற்றச்சாட்டு
பெகாசஸ் உளவு மென்பொருளை 4 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கு வங்க அரசுக்கு விற்க முயற்சிகள் நடந்தன. நான் வேண்டாம் என மறுத்த நிலையில் ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயு வாங்கினார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
இலங்கைக்கு ரூ.7,500 கோடி உதவி
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு மத்திய அரசு ரூ.7,500 கோடி கடனுதவி அளிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
கொரோனா அப்டேட்
உலகளவில் இதுவரை 46.55 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 39.75 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 60.86 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியதும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கோரினார்.
சபாநாயகர் நிராகரித்ததால் அவையில் அதிமுகவினர் கூச்சல் செய்து வருகின்றனர்.
2022- 23ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
திருக்குறள் உடன் அவையை தொடக்கி வைத்தார் சபாநாயகர். அப்பாவு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ரஷ்ய ராணுவத்தினருக்கு பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க ஊழியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள எதிர்கட்சித் தலைவர் அறையில் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்கட்சி சார்பில் எழுப்ப வேண்டிய கேள்விகள், சிறப்பு கவன ஈர்ப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, விழுப்புரத்தில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இலங்கையில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணிக்கு அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அனைவரது வாழ்விலும் ஹோலிப் பண்டிகை மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டது. 146 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஒருவர் உயிரிழந்தார்.
2 நாள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் பிரதமர் பூமியோ கிசிடா நாளை இந்தியா வருகிறார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று டெல்லியில் நடைபெறவிருக்கும் இந்தியா-ஜப்பான் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.