இந்தியா இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை குறுகிய கால சலுகைக் கடனாக வழங்கவுள்ளது.
இதற்கான உடன்படிக்கை புது டெல்லியில் உள்ள இந்திய நிதி அமைச்சில் நேற்று (17) கைச்சாத்திடப்பட்டது.
இந்திய அரச வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் பிரதி பொது முகாமையாளர் ஷிரி புஷ்கார் மற்றும் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சின் செயலாளர் .ஆட்டிகல ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இந்நிகழ்வில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ ,இந்தியய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இந்திய வெளி நாட்டலுவல்கள் அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
உணவு, மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்த ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய நிதியமைச்சு தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடியுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார ஒத்துழைப்புகள் தொடர்பில் இங்கு நீண்ட நேரம் ஆராயப்பட்டுள்ளது.