தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.
நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை வாசித்து வருகிறார்.
தமிழகத்தில் உள்ள தொன்மையான தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆதரவற்ற மற்றும் காயமடைந்த விலங்குகளை பாதுகாக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்காக ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழகத்தில் புதிய வானிலை கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.