சென்னையில், 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்

44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளை எதிர்வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 முதல்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

சர்வதேச அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் ‘செஸ் ஒலிம்பியாட்’ முக்கியமானது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட்டில் சுமார் 190 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டிற்கான போட்டிகள் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடைபெற இருந்தது.

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளை பல்வேறு விளையாட்டு அமைப்புகளும் ரத்து செய்து வரும் நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளும் மொஸ்கோவில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்தியாவில் நடத்த அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்) முயற்சி எடுத்து வந்தது.

இந்த போட்டியை நடத்த சுமார் ரூ 75 கோடி வரை செலவாகும் என்றும் இதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு தலைவர் பாரத் சிங் சவுகான் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

பல்வேறு நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி முகாமையாளர்கள் என மொத்தம் 2,500 பங்கேற்கும் நிகழ்வு என்பதால் விமான சேவைஇ போக்குவரத்துஇ தங்குமிட வசதிகள் இருக்கும் நகரம் தேவைப்பட்டது.

அதன்படி தில்லி அல்லது சென்னையில் இந்தப் போட்டிகள் நடத்தப்படலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்தப் போட்டிகள் சென்னையில் நடைபெறும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.