கேரள மாநிலம் பாலக்காட்டில் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
அப்பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை ஒன்று, வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் கோழிகளை வேட்டையாடி வருவதாக குடியிருப்பு வாசிகள் வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், லிஜூ என்பவரது வீட்டின் தோட்டப்பகுதியில் சிறுத்தை நடமாடிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து, லிஜூவின் வீட்டில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிப்பதற்கான கூண்டுகளை அமைத்தனர்.
அதிகாலை 3.30 மணிக்கு, அங்கு வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிக் கொண்டது.