பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழக பட்ஜெட்டினை நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார்.
குறிப்பாக தொழிற்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
சரி தொழிற்துறைக்கு எந்த மாதிரியான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகின? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பட்ஜெட்டில் இந்த 4 துறைகளுக்கு முக்கியத்துவம்.. ஏன்..பிடிஆர் சொல்வதென்ன?
உலக முதலீட்டாளார்களை ஈர்க்க திட்டம்
தமிழில் பட்ஜெட்டினை வாசித்த பிடி ஆர் தீடிரென தனது உரையினை ஆங்கிலத்தில் வாசித்தார். இது உலக முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முக்கிய மையமாக தமிழகம் உள்ளது. ஆக உலக முதலீட்டாளார்களின் வசதிக்காக ஆங்கிலத்தில் பேசுவதாகவும் கூறினார்.
தொழில் பூங்காக்கள்
தொழிற்துறையினருக்கு ஊக்கத்தினை அளிக்கும் வகையில் 100 பில்லியன் டாலர் என்ற இலக்கை அடையும் வகையில், புதிய உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். புதிய காலணி மற்றும் தோல் தொழில் திட்டம், தமிழகம் முழுக்க தொழில் வளர்ச்சியினை பரவலாக்கும் வகையில், மதுரை திருவள்ளூர், கோவை, பெரம்பலூர், வேலூர், ஆகிய 5 மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம் 50,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடு ஈர்க்கப்படும்.
ஸ்டார்ட் அப்களுக்கு என்ன?
தமிழகம் முழுக்க தொழில் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில் அந்த நிறுவனங்களின் பொருட்களை, 50 லட்சம் ரூபாய் அளவில் தமிழக அரசு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இது ஆரம்ப காலக்கட்டத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பெரும் உதவிகரமாக இருக்கும் என்பதோடு, மேற்கொண்டு விரிவாக்கம் செய்யவும் பயனுள்ளதாக இருக்கும்.
பிளாக்செயின் தொழில்நுட்பம்
சர்வதேச அளவில் பிளாக் செயின் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் ஒரு அம்சமாக உள்ளது. இதற்கிடையில் இதனை ஊக்குவிக்கும் விதமாக பிளாக் செயின் தொழில் நுட்பத்தினை மேம்படுத்த 190 கோடி ரூபாய் நிதியினை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
tn budget 2022: What are the important announcements for the industry ?
tn budget 2022: What are the important announcements for the industry ?/தொழிற்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன.. இது எந்தளவுக்கு பயனளிக்கும்..!