சின்னத்திரையில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட ஜோடி என்றால் அது ராஜா ராணி சீரியல் சஞ்ஜீவ் கார்த்திக் – ஆல்யா மானசா ஜோடிதான். சஞ்ஜீவ் – ஆல்யா ஜோடி சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார்கள். அது யாருக்கு பரிசளித்துள்ளார்கள் என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் டாக் ஆகியுள்ளது.
சீரியலில் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளானவர்கள் நடிகர் சஞ்ஜீவ் கார்த்திக் மற்றும் நடிகை ஆல்யா மானசா ஆவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்ஜீவ் கார்த்திக் – ஆல்யா மானசா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. ராஜா ராணி சீரியலும் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, சஞ்ஜீவ் கார்த்திக் – ஆல்யா மானசா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இதையடுத்து, ஆல்யா கர்ப்பமானார். ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. சஞ்ஜீவ் கார்த்திக் – ஆல்யா மானசா இருவரும் தங்கள் குழந்தைக்கு அய்லா என்று பெயர் வைத்துள்ளனர்.
சஞ்ஜீவ் கார்த்திக் – ஆல்யா மானசா இருவரும் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் ரசிகர்களுடன் நெருக்கமாக டச்சில் இருக்கிறார்கள்.
திருமணத்துக்கு பிறகு, சஞ்ஜீவ் கார்த்திக், விஜய் டிவியில் காற்றின் மொழி சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியல் முடிந்த பிறகு, சன் டிவியில் அண்மையில் தொடங்கப்பட்ட புதிய சீரியலான கயல் சீரியலில் நடித்து வருகிறார்.
அதே போல, ஆல்யாவும் திருமணத்துக்கு பிறகு, விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து கலக்கி வருகிறார். ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில், ஆல்யா மானசா, மீண்டும் கர்ப்பமடைந்தார். அவருக்கு இந்த மாதம் பிரசவத் தேதி கொடுக்கப்பட்டுள்ளதால், ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதாகக் கூறினார். அவருக்கு பதிலாக, சீரியலில் சந்தியாவாக ரியா விசுவநாதன் நடிக்க இருக்கிறார். இவர் சென்னையை சேர்ந்த மாடல். இவர், பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷாலின் நண்பர் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆல்யா மானசா இந்த சீரியலில் இருந்து விலகியது தற்காலிகமானதுதான்.அவர் மீண்டும் சீரியலில் இணைவார் என்று உறுதியாகக் கூறுகின்றனர். அதே நேரத்தில், இரண்டாவது குழந்தையின் வரவுக்காக ஆல்யா எண்ணி ஆலியா மானசாவின் குடும்பத்தினர் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
திருமணத்துக்கு பிறகு, ஆல்யா பர்த்டே, அய்லா பர்த்டே என சஞ்ஜீவ் தனது மனைவி ஆல்யாவுக்கு சொகுசு கார் வாங்கி பரிசளித்து மகிழ்வித்திருக்கிறார். தற்போது சின்னத் திரை பிரபலங்கள் பலரும் தாங்கள் வாங்கிய புது காருடன் இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், சஞ்ஜீவ் கார்த்திக் – ஆல்யா மானசா ஜோடி தங்கள் சொகுசு காரை பரிசளித்துள்ளனர். சஞ்ஜீவ் கார்த்திக் – ஆல்யா மானசா 50 லட்சம் ரூபாய் விலையுள்ள மெர்சிடெஸ் பென்ஸ் காரை யாருக்கு பரிசளித்துள்ளார்கள் என்றால், சஞ்ஜீவ் கார்த்திக்கின் சகோதரருக்குதான் பரிசளித்துள்ளனர். சஞ்ஜீவ் கார்த்திக்கின் சகோதரர் தனது குடும்பத்தினருடன் கார் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். சஞ்ஜீவ் கார்த்திக் – ஆல்யா மானசா பரிசளித்த காருடன் அவருடைய சகோதரர் குடும்பத்துடன் நிற்கும் புகைப்படம் வெளியாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“