தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், வழிகாட்டியின் கூர்மையையும், சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்ட நிதிநிலை அறிக்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில், திட்டமிடுதல்களின் மூலமாக அரசுக்கு வருவாய் அதிகமாகிச் செலவு குறைந்துள்ளதாகவும், வருவாய்ப் பற்றாக்குறை குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் படித்துப் பட்டப்படிப்பில் சேரும் மாணவியர்க்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் மூலம் மாணவிகள் அனைவரும் இனிக் கல்லூரிகளை நோக்கி வருவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மதுரவாயல் – சென்னைத் துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்டப் பாலம், புதிய மின் பேருந்துகள், புத்தொழில் மையங்கள் என அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்துக்கான கலங்கரை விளக்கமாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.