பலரும் மூல நோயால் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு வீட்டு தோட்டத்தில் காய்க்கும் சுண்டைக்காய் தீர்வளிக்கிறது. மூல நோய்க்கு தீர்வளிப்பது மட்டுமல்லாமல், ரத்த சுதிகரிப்பை செய்யும் சுண்டைக்காயை கண்டால் விடாதீர்கள்.
தற்போது மூல நோய் பிரச்னை பரவலாக அதிகரித்து வருகிறது. இந்த மூல நோய்க்கு தீர்வு காண வீடுத் தொட்டத்தில் காய்க்கும் சுண்டைக்காய் தீர்வளிக்கிறது. கடைகளிலும் சுண்டைக்காய் எளிதாக கிடைக்கிறது. சுண்டைக்காயின் பலனைத் தெரிந்துகொண்ட, சுண்டைக்காயை கண்டால் விடாதீர்கள்.
மூல நோய் உள்ளவர்களுக்கு மலம் கழிக்கும்போது, ரத்தத்துடன் மலம் வெளியேறும். இதைத் தான் மூல நோய் என்று சொல்லுவார்கள். மூலநோயைக் கட்டுப்படுத்த எத்தனையோ சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள். ஆனாலும் சரியாகாமல், ஒரு கட்டத்தில் அறுவை சிகிச்சைக்கு செல்வார்கள். ஆனாலும், மீண்டும் மூல நோய் பிரச்னை வரும். சில சமயங்களில் மூல நோய்க்கு மருந்து சாப்பிடும்போது சரியாவது போல இருக்கும். சரியாகி விட்டது என்று மருந்து சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் மீண்டும் மூல நோய் பிரச்னை வரும்.
மூல நோய்க்கு நிரந்தர தீர்வு காண விரும்புகிறீர்களா, அப்போது சுண்டைக்காயைக் கண்டால் விடாதீர்கள். அப்படியான சுண்டைக்காயை சுவையாக சாப்பிட விரும்புகிறீர்களா அதற்கு சுண்டைக்காயை சூப் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
மூல நோய் உள்ளவர்கள், சுண்டைக்காய் சூப்பை வாரத்தில் இரண்டு நாட்கள் குடித்து வந்தால் இரத்தப் போக்கு விரைவில் நிற்கும். மூல நோய் குணமாகும்.
பச்சை சுண்டைக்காயின் நன்மைகள்: பச்சை சுண்டைக்காயில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, அதிக அளவில் உள்ளது. சுண்டைக்காய் ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது. அதுமட்டுமல்லாமல், நம்முடைய உடல் வளர்ச்சியிலும் ஆரோக்கியத்திலும் பெரும் பங்கு வகிக்கும். சுண்டைக்காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள்.
சுண்டைக்காய் சூப் செய்வது எப்படி?
ஒரு கைப்பிடி அளவு சுண்டைக் காய் எடுத்துக்கொள்ளுங்கள். சுண்டைக்காயை சுத்தமாக கழுவி அதை ஒரு உரலில் போட்டு லேசாக இடித்துக்கொள்ளுங்கள். ஸ்டவ்வை பற்றவைத்த பின், ஒரு வானலியை எடுத்து ஸ்டவ் மீது வையுங்க்ள். அதில், 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அந்த எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம் – 6 பல், பொடியாக நறுக்கிய வெள்ளைப் பூண்டு – 5 பல், கருவேப்பிலை ஒரு கொத்து, இந்த பொருட்களை சேர்த்து நன்றாக வதக்குங்கள். அதற்கு பிறகு, வெட்டி வைத்திருக்கும் சுண்டைக்காயை போட்டு நன்றாக வதக்குங்கள்.
நன்றாக வதங்கிய பின்பு, 1 பெரிய டம்ளரில் தண்ணீர் எடுத்து ஊற்றுங்கள். பின்னர், தேவையான அளவு உப்பு போட்டு ஒரு தட்டை போட்டு மூடி சுண்டைக்காயை நன்றாக வேக வையுங்கள். அப்படி மூடி வைத்து வேக வைக்கும்போது, சுண்டைக்காயில் இருக்கும் சாறு சூப்பாக மாறும்.
இதையடுத்து, இறுதியாக அரைத்த மிளகு சீரக பொடி – 1 ஸ்பூன் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி, ஸ்டவ்வில் இருந்து இறக்கி வைத்தால் சுண்டைக்காய் சூப் தயார்.
சுண்டைக்காய் சூப்பை வடிகட்டி, வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கலாம். சுண்டைக்காய் சூப் சிறிது கசப்பு சுவையுடன் இருக்கும். ஆனாலும், சுண்டைக்காய் சூப் வாரத்தில் 2 நாள் குடித்து வந்தால், மூல நோய்க்கு விரைவில் தீர்வு கிடைக்கும். நெஞ்சு சளி இருமல் வராமல் இருக்கும். ஜீரண சக்தியை சீராக்கும். வயிற்றுப்புண்ணை சரி செய்யும்.
பச்சை சுண்டைக்காய் கிடைக்கவில்லை என்ன செய்வது என்று கேள்வி எழலாம். கவலைப் படாதீர்கள். காயவைத்த சுண்டைக்காய் கடைகளில் கிடைக்கிறது. அதை வாங்கிப் பொடி செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். சுண்டைக்காய் பொடியை சூடான சாதத்தில் இந்த போட்டு பிசைந்து தினமும் ஒரு கைப்பிடி சாதம் சாப்பிட்டால் போதும். பச்சை சுண்டைக்காயின் பலனை நாம் பெற்றுவிடலாம்.
இப்படி மூல நோய்க்கு தீர்வு தரும் சுண்டைக்காய் சூப்பின் பலனை அனுபவ பூர்வமாக தெரிந்துகொள்ளும்போது, பிறகு, சுண்டைக்காயைக் கண்டால் நீங்களே விடமாட்டீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“