கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. இதற்கிடையில் இடைகால பட்ஜெட்டினை நிதியமைச்சர் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இன்று நடப்பு நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டினை தாக்கல் செய்து வருகின்றார். இந்த முறையும் பேப்பர் இல்லாத பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் கொரோனாவினால் சரிவடைந்த பொருளாதாரமே இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ள நிதியமைச்சர், நடப்பு ஆண்டில் பொருளாதாரத்தினை மேம்படுத்தவும், 4 முக்கிய துறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நிதிபற்றாக்குறை 4.61% இருந்து 3.8% ஆகக் குறையும் – பிடிஆர்
உக்ரைன் பிரச்சனை
மேலும் ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரின் காரணமாக மா நில பொருளாதாரம் பதிக்கப்படக் கூடும். ஆக இந்த நிதியாண்டு மிகவும் இக்கட்டான பொருளாதார நிலை இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தான் நிதி நிலை அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சமூகத்தில் அனைவருக்கும் சென்று பயனளிக்கும் வகையில் இந்த நிதி நிலை அறிக்கை இருக்கும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
முக்கியத்துவம்
இந்த நிலையில் இப்படி நெருக்கடியான நிலைக்கு மத்தியில் இதில் வேளாண்மை உள்ளிட்ட முதன்மை துறையை மேம்படுத்துதல், சமூக பாதுகாப்பினை மேம்படுத்துதல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு திறனை அதிகரித்தல், புதிய முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலமும், தொழில் முனைவோரினை ஊக்குவிப்பதன் மூலம் வேலை வாய்ப்பினை ஊக்குவித்தல், கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டின் மூலம் மகளிர் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவோம் என பட்டியலிட்டுள்ளார்.
இளைஞர்களுக்கு முக்கியத்துவம்
இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுக்கு 5 லட்சம் இளைஞர்கள் ஊக்குவிக்க நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்படும்.
ஏழை எளிய குடும்பத்தினை சேர்ந்த பெண்களின் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இளைஞர்களின் வாழ்வாதரத்தினை மேம்படுத்த வழிவகுக்கும்.
விவசாயத் துறைக்கு ஒதுக்கீடு
இது தவிர சுய உதவிக்குழு, விவசாயிகளுக்கு பயிர்க்கடன் நிதி வழங்க 4,130 கோடி ரூபாயும், வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு 200 கோடி ரூபாயும், நீர்வளத்துறைக்கு 7338.36 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
tn budget 2022: The importance of these 4 sectors in the Tamil Nadu budget? what does PTR say?
tn budget 2022: The importance of these 4 sectors in the Tamil Nadu budget? what does PTR say?/பட்ஜெட்டில் இந்த 4 துறைகளுக்கு முக்கியத்துவம்.. ஏன்..பிடிஆர் சொல்வதென்ன?