உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள ரேவ்ராபூர் கிராமத்தில் ஏராளமானோர் இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு வண்ணங்களை பூசி கொண்டாடினர்.
அப்போது, வண்ணம் பூசுவதில் ஏற்பட்ட தகராறில் அங்கிருந்தவர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், அகந்த் பிரதாப் சிங் (32) மற்றும் ஷிவ்ராம் பாசி (55) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் ஜமோ பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளனர். மேலும், வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்.. #லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போர் 23-வது நாள்: அமைதிக்கான சர்வதேச பொறுப்புகளை தோளில் சுமக்க வேண்டும் -சீன அதிபர்