நடிகர் அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் கழித்து அதே கூட்டணியில் கடந்த மாதம் ‘
வலிமை
‘ படம் வெளியானது.
கடந்த மாதம் வெளியான ‘வலிமை’ படம் வசூலில் சக்கை போடு போட்டாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பினை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை. மேலும் இந்தப்படத்தில் அஜித்தின் லுக் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது. வலிமையை தொடர்ந்து ‘ஏகே 61’ படத்தில் மூன்றாவது முறையாக வினோத், போனி கபூர், அஜித் மூவரும் இணைய உள்ளனர்.
இந்நிலையில், அஜித்தின் அடுத்தப் படத்தை
விக்னேஷ் சிவன்
இயக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தீயாக செய்திகள் பரவின. இளம் இயக்குனரான விக்னேஷ் உடன் அஜித் இணையவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
‘பீஸ்ட்’ படத்துடன் மோத தயாராகும் ’கேஜிஎஃப் 2′: இப்பவே போட்டி ஆரம்பிச்சாச்சு..!
இந்நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி
லைகா நிறுவனம்
தயாரிக்கவுள்ள ‘
ஏகே 62
’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த வருட இறுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிவித்துள்ளனர்.
‘ஏகே 62’ படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த வருடம் இந்தப்படம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர். ‘வலிமை’ படத்தால் ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு அஜித்தின் அடுத்தடுத்த பட அறிவிப்புகள் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
வலிமையை மிஞ்சுமா ET? கே ராஜனுடன் சிறப்பு நேர்காணல்!