விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 5 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. ஒவ்வொரு சீசனுமே எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பெற தவறுதில்லை.
இப்படி ஒரு நிலையில் தான், தமிழ் ஒ.டி.டி. வரலாற்றில் புதிய முயற்சியாக, பிபி அல்டிமேட் நிகழ்ச்சி, கடந்த ஜன.30 அன்று தொடங்கியது. இது டிஸ்னி பளஸ் ஹாட் ஸ்டாரில்’ 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிறது.
இதில் வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபினய், நிரூப், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஸ்ருதி, சுஜா வருனி, அனிதா சம்பத், தாமரை, ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன் மற்றும் அபிராமி என கடந்த 5 சீசன்களில் பங்கேற்ற 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். விஜய் டிவி காமெடியன் சதீஷ், ரம்யா பாண்டியன் வைல்ட்கார்ட் போட்டியாளர்களாக என்ட்ரி கொடுத்தனர்.
இதில் பாதி போட்டியாளர்கள் வீட்டிலிருந்து வெளியேற, இப்போது பிபி அல்டிமேட் இறுதிச்சுற்றை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அந்தவகையில்’ பிக்பாஸ் சீசன் 5, பிபி அலடிமேட் என அடுத்தடுத்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதில் அபிநய்யும் ஒருவர். ஆனால் இரண்டிலும் வெற்றி பெறாமல் அவர் பாதியிலேயே, நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை, அபினய்- மிகவும் சாதுவாணவர். மற்ற போட்டியாளர்களிடம் மிகவும் கடிந்து கொண்டதில்லை. ஆனால் இடையில் வெடித்த பாவனி பிரச்சனை’ அபிநய் மீது சில விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. ஆனாலும் அபிநய் அதை எதையும் பொருட்படுத்தமால், பாவனியிடமும் சரி, சக போட்டியாளர்களிடமும் சரி’, எப்போதும் போலவே பழகினார்.
அபிநய் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரையில், மிகவும் அன்பான கணவர். பொறுப்பான அப்பா. இந்நிலையில், இன்று அபிநய் பிறந்தநாளை முன்னிட்டு, பல பிக்பாஸ் பிரபலங்கள் அபிநய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஐக்கி பெர்ரி, தனது இன்ஸ்டாவில்’ அபிநய், கணேஷ் வெங்கட்ராம், சோம், சிபி, ஆரி, ஷாரிக், வனிதா ஆகியோருடன் இருக்கும் படங்களை பகிர்ந்து’ அனைத்து சீசன்களும் ஒன்றாக., ஏனெனில் இது ஒரு அற்புதமான ஆன்மாவின் பிறந்தநாள்.,
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபிநய் என வாழ்த்தியுள்ளார்.
ஆரி அர்ஜூனன் தனது இன்ஸ்டா போஸ்டில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சான். உங்கள் அனைவருடனும் ஒரு அருமையான நேரம் இருந்தது என பதிவிட்டுள்ளார்.
கணேஷ் வெங்கட்ராம் இன்ஸ்டா பதிவில், நேற்றிரவு பற்றியது!
உனக்கு சூப்பர் டூப்பர் பிறந்தநாள் வாழ்த்துக்கள், இன்னும் ஒரு அற்புதமான வருடம் மச்சி என வாழ்த்தியுள்ளார்.
அபிநய் தன்னுடைய இன்ஸ்டாகிராமில்’ தனது தாத்தா ஜெமினி கணேசன், பாட்டி சாவித்திரியுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“