இந்திய பங்கு சந்தையானது பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அவ்வப்போது சரிவினைக் கண்டாலும் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வருகின்றது. குறிப்பாக கடந்த இரு அமர்வுகளில் மட்டும் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு கிட்டதட்ட 9 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டியினை அதிகரித்த போதிலும் ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தகக்து.
பொதுவாக இதுபோன்ற சமயங்களில் அண்டை நாடுகளில் உள்ள பங்கு சந்தைகளில் உள்ள முதலீடுகள் பெரியளவில் வெளியேறலாம். இதனால் பங்கு சந்தையானது மிக மோசமான சரிவினைக் காணலாம். ஆனால் கடந்த இரு அமர்வுகளாகவே இதற்கு மாறாக சந்தையானது ஏற்றம் கண்டு வருவது முதலீட்டாளர்களுக்கு மிக பெரிய சர்பிரைஸ் கொடுக்கும் விஷயமாக உள்ளது.
ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டம்.. சாமானிய மக்கள் அதிர்ச்சி..!
ரூ.9 லட்சம் கோடி லாபம்
கடந்த மார்ச் 15 அன்று பிஎஸ்இ-யில் உள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 251.65 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இது நேற்று 260.37 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த இரு அமர்வில் மட்டும் இது 8.72 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனம் அதிகரித்துள்ளது. இது இந்த இரு அமர்வுகளில் சென்செஸ் 2,086 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 623 புள்ளிகளாகவும் ஏற்றம் கண்ட நிலையில், அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.19 லட்சம் கோடி லாபம்
இதே கடந்த 8 அமர்வுகளாக பார்க்கும்போது முதலீட்டாளர்கள் 19 லட்சம் கோடி ரூபாயினை பெற்றுள்ளனர். இது மார்ச் 7 நிலவரப்படி 241 லட்சம் கோடி ரூபாயாக இருந்த பிஎஸ்இ நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, நேற்று 260 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஓராண்டில் சென்செக்ஸ் நிலவரம்?
எனினும் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது சென்செக்ஸ் 0.67% அல்லது 389 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது. இதே நிஃப்டி 0.39% அல்லது 67 புள்ளிகளை இழந்தும் காணப்படுகின்றது. எனினும் ஒரு ஆண்டில் சென்செக்ஸ் 16.19% அல்லது 8062 புள்ளிகள் அதிகரித்தும், இதே நிஃப்டி 17.43% அல்லது 2565 புள்ளிகள் அதிகரித்தும் காணப்படுகின்றது.
ஏற்றம் கண்ட துறைகள்
இதற்கிடையில் நிஃப்டி, சென்செக்ஸ் இரண்டும் இன்னும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கடந்த வாரத்தில் இருந்தே வங்கி, ஆட்டோ, எஃப்.எம்.சி.ஜி, ஐடி, ரியால்டி உள்ளிட்ட துறைகள் நல்ல லாபகரமான துறைகளாக இருந்தன. குறிப்பாக மெட்டல் தவிர மற்ற அனைத்து துறைகளுமே நல்ல லாபகரமான துறைகளாக இருந்தன.
Investors gain Rs.9 lakh crore in last 2 sessions: will continue the gain?
Investors gain Rs.9 lakh crore in last 2 sessions: will continue the gain?/முதலீட்டாளர்கள் செம ஹேப்பி.. 2 நாளில் 9 லட்சம் கோடி லாபம்.. உங்களுக்கு எவ்வளவு?