சென்னை: கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் நாளை பணிக்கு வர உத்தரவிடப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு தேவையான தரவுகளை ஒப்படைக்க தவறாது பணிக்கு வரவேண்டும் எனவும், நாளை அனைவரும் பணிக்கு வரவேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரன் சுற்றறிக்கை வெளியிட்டார்.