தென் மாவட்டங்களில் ஐடி பூங்காக்கள் நிறுவப்படுமா.. தமிழக பட்ஜெட்டில் முக்கிய எதிர்பார்ப்பு.. !

தமிழக பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளார். திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

திமுக ஆட்சிக்கு வரும் முன்னர் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்தது. ஆனால் அதில் இன்னும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலேயே இருந்தது.

இதற்கிடையில் இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

முக்கிய எதிர்பார்ப்புகள்

குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் குறித்தான அறிவிப்பினை வெளியிடலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. அதோடு மாதாந்திர மின் கட்டண முறை பற்றி அறிவிக்கப்படலாம். மேலும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கொரோனா காலத்தில் மிக மோசமாக பாதிக்கட்டுள்ள நிலையில், அதனை மீட்டெடுப்பதற்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடி பூங்காக்கள் நிறுவப்படுமா?

ஐடி பூங்காக்கள் நிறுவப்படுமா?

இதனையடுத்து பெரும்பாலான மக்களின் மிகப்பெரிய தேவையே வேலை வாய்ப்பு தான். தமிழகத்தினை பொறுத்த வரையில் கல்லூரி, தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் என பலவற்றிற்காகவும் பெரும் நகரங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் விதமாக ஐடி பூங்காக்கள் டயர் 2 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்படுமா? என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

மருத்துவ கல்லூரிகள் அதிகரிக்கப்படுமா?
 

மருத்துவ கல்லூரிகள் அதிகரிக்கப்படுமா?

குறிப்பாக உக்ரைன் ரஷ்யா பிரச்சனைகளுக்கு மத்தியில் பல ஆயிரம் பேர் அண்டை நாடுகளில் மருத்துவம் படித்து வருவதும், உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பியுள்ள மாணவர்கள் தற்போது அரசின் உதவி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. இதற்கிடையில் மருத்துவ கல்லூரிகள்,சித்த மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மேலும் உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்காக ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.

தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள்

தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள்

சென்னை, கோவை , ஓசூர் போன்ற நகரங்களில் தொழில் சாலைகள் பெரும் அளவில் இருக்கும் நிலையில், அவற்றில் 10% கூட நெல்லையில் இல்லை. அதேபோல அரசுத் துறையில் பல்வேறு துறைகள் இருந்தும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படவில்லை. இருக்கும் காலியிடங்களாவது பூர்த்தி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tamil Nadu budget expectations 2022-23: what to expect tomorrow

Tamil Nadu budget expectations 2022-23: what to expect tomorrow Tamil Nadu budget expectations 2022-23: what to expect tomorrow/தென் மாவட்டங்களில் ஐடி பூங்காக்கள் நிறுவப்படுமா.. தமிழக பட்ஜெட்டில் முக்கிய எதிர்பார்ப்பு.. !

Story first published: Friday, March 18, 2022, 8:30 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.