நீங்கள் அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் நபரா?.கண்கள் பாதிக்காமல் இருக்க இதே சில எளிய வழிகள்


இன்றைய தொழிலுட்ப உலகில் பலரும் கணணி முன் தான் நேரத்தை கழிக்கின்றார்கள்.

அதிக நேரம் கணணி முன் இருந்து நோயையும் தேடி கொள்கின்றார்கள்.  குறிப்பாக கண் பிரச்சினை. 

 இதனால் ஏற்படும் கண் பிரச்சனைக்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்று பெயர். இதன் அறிகுறிகள் கண் எரிச்சல், முதுகு வலி, கழுத்து மற்றும் தலை போன்றவற்றில் வலி, மங்கலான பார்வை போன்றவையாகும் 

 பிரச்சனையில் இருந்து தற்காத்துக்கொள்ள சில வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பற்றி தெரிந்து கொள்ளவும்.

  • நீண்ட நேரம் கம்ப்யூட்டரின் முன் வேலை செய்பவர்கள் இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை, கம்ப்யூட்டரின் திரையில் இருந்து பார்வையை விளக்கி, 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை 20 நொடிகள் உற்று பார்க்க வேண்டும்.. 
  • நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது, சிறிது நேரத்திற்கு ஒருமுறை உங்கள் கண்களை சிமிட்டிக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் கண்களில் இயற்கையாக உருவாகும் நீர்ச்சத்து நிலைத்திருக்கும். 
  • நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது, உங்களுக்கு தேவையான அளவில் வெளிச்சத்தை குறைத்து வைக்க வேன்ண்டும். இதனால் கண்களுக்கு எந்த ஸ்ட்ரைனையும் தராது. 
  • கம்ப்யூட்டருக்கும் உங்களுக்கும் போதுமான அளவு தொலைவு விட்டு கம்ப்யூட்டரைப் பயன்படுத்தவும். இதனால் உங்கள் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும். 
  • உங்கள் உள்ளங்கைகளை நன்கு தேய்த்து, சூடு பரப்புங்கள். பின் உள்ளங்கைகளை கண்களின் மேல், 60 நொடிகள் ஒற்றி எடுக்க, களப்படைந்த உங்கள் கண்களுக்கு ஆறுதலாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்யுங்கள். . 
  • நீங்கள் வேலை செய்யும் இடத்தில் சரியான ஒளி அமைப்புகளை அமைத்திடுங்கள். அறையின் ஜன்னல்கள் மற்றும் சீலிங்குகளில் இருந்து வரும் ஒளியானது கண்களை கூசும், அதோடு கம்ப்யூட்டரை அடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் எழுத்துக்கள் தெளிவாக தெரியாமல் கண்களை ஸ்ட்ரைன் செய்ய நேரிடும். 
  • கண்களுக்கு நிம்மதி அளிக்கும் வண்ணம் பச்சையாகும். தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலைப்பார்க்கும் போது சிறிது நேரம் ஜன்னலின் வழியே பச்சை நிற மரச் செடிகளை பாருங்கள் அப்படி இல்லையெனில் கம்ப்யூட்டரின் திரையின் வால்பேப்பரை பச்சை நிறத்தில் மாற்றுங்கள். .
  • கம்ப்யூட்டர் கண்ணாடிகள் கடைகளில் விற்கின்றனர். இந்த கண்ணாடிகள், கண் கூசும் ஒளியை குறைத்து, தெளிவை அதிகப்படுத்தி, உங்கள் கண்களின் ஸ்ட்ரைனை சரி செய்து உங்கள் கண்களை ரிலாக்ஸ் செய்கிறது. . 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.