செய்திகள் சில வரிகளில்… கர்நாடகா| Dinamalar

முதல்வர் சுற்றுப்பயணம்

பெங்களூரு: முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று யாத்கிர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி பணிகளை துவக்கி வைக்கிறார். சஹபுரா தாலுகா தோரணகல் செல்லும் அவர், சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குகிறார். அமைச்சர்கள் அசோக், கோவிந்த கார்ஜோள் உடன் செல்கின்றனர்

.ஏப்., 1 முதல் பால் விலை உயரும்?

பெங்களூரு: கர்நாடகா பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில், நந்தினி பால் விலையை 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செலவுகள் அதிகரிப்பதால் பால் விலை உயர்த்தப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் விலை உயர்வு அமலுக்கு வர வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குமாரசாமி கண்டனம்

பெங்களூரு: பள்ளி பாடங்களில் பகவத் கீதையை சேர்க்க ஆலோசிப்பதாக கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் கூறியுள்ளதற்கு முன்னாள் முதல்வர் குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ”நமது குழந்தைகளுக்கு தேவைப்படுவது அவர்களது எதிர்காலத்தை சிறப்பாக்கும் கல்வி. அதற்கு கவனம் கொடுங்கள். பகவத் கீதையை தாத்தா, பாட்டி சொல்லி கொடுப்பர்,” என்றார்.

கரக உற்சவத்திற்கு ஆலோசனை

பெங்களூரு: பெங்களூரில் கரக உற்சவம் அடுத்த மாதம் 8ல் துவங்குகிறது. இது குறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பாஜ., – எம்.எல்.ஏ., உதய் கருடாச்சார், எம்.எல்.சி., ரமேஷ், கலெக்டர் மஞ்சுநாத் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.