இலங்கையில் அதிகரிக்கும் இணைக்குற்றச்சாட்டு! – நைஜீரியர்களை நாடுகடத்துமாறு கோரிக்கை



நாட்டில் அதிகரித்துள்ள இணையக் குற்றங்களை கட்டுப்படுத்த தேசிய கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCID) தெரிவித்துள்ளது.

அத்துடன், நைஜீரிய சைபர் குற்றவாளிகளை நாடு கடத்தவும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

தற்போது ஒரு தேசிய சைபர் பாதுகாப்பு உத்தி உருவாக்கப்பட்டு வருவதுடன், வெளிநாட்டு சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நைஜீரியர்கள்.

12 மாத காலப்பகுதியில், 5,400 முறைப்பட்டு தரவுகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அவை தொடர்பாக 170 சந்தேக நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.

ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது மேல் மாகாணத்தில் குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.

ஃபிஷிங் மோசடிகள், பணம் செலுத்தாத/ வழங்காத மோசடிகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக மிரட்டி பணம் பறித்தல் ஆகியவை முதல் மூன்று குற்றங்களாகும்.

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு வழங்கிய தரவுகளின்படி, இந்த குற்றங்கள் தொடர்பான இழப்புகள் 10 மில்லியனுக்கும் அதிகமானவை.

இந்த குற்றங்களில் தோராயமாக 75 வீதமானவர்கள் இலங்கையர்களாலும், 25 வீதமானவர்கள் நைஜீரியர்களாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அச்சுறுத்தி பணம் பறித்தல் தொடர்பாக 670 முறைப்பாடுகள், சமூக ஊடக சுயவிவரங்களை ஹேக்கிங் செய்வது குறித்து 370 முறைப்பாடுகள், பாலியல் துன்புறுத்தல் குறித்து 260 முறைப்பாடுகள், 1,400 அவதூறு வழக்குகள், 20 சைபர் டெரரரிசம் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் 2,280 சைபர் கிரைம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

மேலும், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கணினிகள் பற்றாக்குறை உள்ளதுடன், பெரும்பாலான ஊழியர்கள் அலுவலக நோக்கங்களுக்காக தங்கள் தனிப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.