சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் – எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது
விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் அத்துறைக்கென தனியாக பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. தேர்தலில் வென்ற திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் கடந்த ஆண்டு மாநிலத்தின் முதல் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்தாண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
Farmers Budget : விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு பட்ஜெட்டில் விடை கிடைக்கும்  - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் | Minister MRK Panneerselvam says the  budget will ...
வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இப்பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இத்தகவலை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகாவிற்கு பிறகு வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் 3ஆவது மாநிலம் தமிழகம் ஆகும்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.