இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு
யாத்ரா
,
லிங்கா
என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பிய ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக மூன்று மொழிகளை சார்ந்த சூப்பர் ஸ்டார்கள் ஐஸ்வர்யாவின் ‘முசாபிர்’ ஆல்பம் பாடலை வெளியிட்டனர்.
இந்த ஆல்பம் பாடலை யாரும் எதிர்பார்க்காத விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர்
தனுஷ்
, தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்தனர். தோழி என கூறி வாழ்த்து தெரிவித்திருந்ததால் நெட்டிசன்கள் கண்டமேனிக்கு தனுஷை வறுத்தெடுத்து வந்தனர்.
போடு வெடிய… பட்டாசாய் வெளியான ‘ஏகே 62’ பட அறிவிப்பு: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ஆனால் ஐஸ்வர்யா இந்த ட்விட்டுக்கு நன்றி தனுஷ் என்று மட்டும் பதிலளித்திருந்தார். இந்நிலையில் இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி சென்னை தீவுத் திடலில் நடைபெற்று வருகிறது. ராக் வித் ராஜா என்ற நிகழ்ச்சியில் ராஜாவின் இசை ராஜ்ஜியம் படைத்து வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு தான் தனுஷ் தனது இரண்டு மகன்களான யாத்ரா, லிங்காவுடன் வந்துள்ளார். ஏற்கனவே ‘நானே வருவேன்’ படப்பிடிப்பில் தனது மகன் யாத்ராவை தனுஷ் சந்தித்த புகைப்படங்கள் படுவேகமாக இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இளையராஜாவின் தீவிர ரசிகரான தனுஷ், பலவித மன அழுத்தங்களில் இருந்து விடுபட தனது இரு மகன்களுடன் அவரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
உ பி யில் இருக்கும் வெறித்தனமான ரஜினி ரசிகர்!