தேனி மாவட்டம் லோயர் கேம்பில் மின்சாரம் தாக்கிய சிறுவனின் மேல் சிகிச்சைக்கு, முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒதுக்கப்பட்ட 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை சிறுவனின் பெற்றோரிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
செல்வகுமார், ஜெயா தம்பதியின் 8வயது மகன் கடந்த ஆண்டு மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தான்.சிறுவனின் மேல் சிகிச்சை உதவுமாறு பெற்றோர் முதலமைச்சருக்கு மனு அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில் சிறுவனின் மேல் சிகிச்சைக்கு 5 லட்ச ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டது. 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை சிறுவனின் வீட்டிற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பெற்றோரிடம் வழங்கினார்.