இந்திய வரலாற்றில் வருமான வரித் துறை அதிகப்படியான வரியை வசூல் செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் முன்கூட்டிய வரிச் செலுத்துதலில் 41 சதவீத அதிகரிப்பால் மொத்த நேரடி வரி வசூல் 48 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது என்று மத்திய நேரடி வரி அமைப்பின் தலைவர் ஜேபி மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.
வாரத்தில் 4 நாள் வேலை.. 3 நாட்கள் விடுமுறை.. ஏன்.. காரணத்த கேட்டா அசந்துருவீங்க..!
13.63 லட்சம் கோடி ரூபாய்
இதன் மூலம் மார்ச் 17ஆம் தேதி நிலவரப்படி நிகர வசூல் ரூ.13.63 லட்சம் கோடியாகும், இது 2018-19ல் ரூ.11.18 லட்சம் கோடியாகவும், 2019-20ல் ரூ.10.28 லட்சம் கோடியாகவும், 2020-21ல் ரூ.9.24 லட்சம் கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய வரலாற்றிலேயே அதிகப்படியான நேரடி வரி வசூலை இந்த ஆண்டுப் பெற்றுள்ளது.
நேரடி வரி வசூல் உயர்வு
மேலும் கடந்த 4 வருடத்தை ஒப்பிடுகையில் 2020-21ஆம் நிதியாண்டில் 48.4 சதவீதமும், 2019-30ஆம் நிதியாண்டில் 35 சதவீதமும், 2018-19 ஆம் நிதியாண்டில் 35 சதவீதமும் அதிக நேரடி வரி வசூலை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டும் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் அதிக வசூலாகியுள்ளது.
CBDT அறிக்கை
ஏப்ரல் 1, 2021 இல் தொடங்கிய நிதியாண்டில் மார்ச் 16, 2022 வரை நிகர நேரடி வரி வசூல் ரூ. 13.63 லட்சம் கோடியாக இருந்தது, இது ஒரு வருடத்திற்கு முந்தைய இதே காலகட்டத்தில் ரூ.9.18 லட்சம் கோடியாக இருந்தது என்று CBDT வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வரிப் பிரிவுகள்
தனிநபர் வருமானத்தின் மீதான வருமான வரி, நிறுவனங்களின் லாபத்தின் மீதான கார்ப்பரேட் வரி, சொத்து வரி, பரம்பரை வரி மற்றும் பரிசு வரி ஆகியவற்றின் கீழ் வசூலிக்கப்படும் வரி தான் இந்த நேரடி வரி.
முன்கூட்டிய வரி வசூல்
மார்ச் 15 ஆம் தேதி நிலுவையில் இருந்த நான்காவது தவணையான முன்கூட்டிய வரி வசூல், 40.75 சதவீதம் அதிகரித்து, 6.62 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மொத்த நேரடி வரி வசூலில் கிட்டத்தட்ட 53 சதவீதம் கார்ப்பரேட் வரியிலிருந்தும், 47 சதவீதம் பங்குகள் மீதான பத்திர பரிவர்த்தனை வரி (STT) உட்படத் தனிப்பட்ட வருமான வரியிலிருந்து வந்தது.
Highest Direct tax collection in history: CBDT
Highest Direct tax collection in history: CBDT நேரடி வரி வசூலில் வரலாற்று சாதனை..!