மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 1997 முதல் 2001 வரை குழந்தை நட்சத்திரமாக எண்ணற்ற படங்களில் நடித்து தற்போது நாயகியாக வலம் வருபவர்
மஞ்சிமா மோகன்
. கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலியுடன் நடித்த ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவரும் தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகரும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன.
முத்தையா இயக்கத்தில் வெளியான ’தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்த போது கெளதம், மஞ்சிமா மோகன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்ததாகவும் இந்த காதலுக்கு இரு குடும்பத்தினரும் பச்சைக்கொடி காட்டி விட்டதை அடுத்து விரைவில் அதிகாரபூர்வ திருமண தேதி வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் தீயாக பரவியது.
இந்நிலையில் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த மஞ்சிமா, என் வாழ்க்கையில் திருமணம் போன்ற பெரிய நிகழ்வை யாரிடமும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இந்த செய்தியை வெளியிட்டவர் என்னிடம் அதை கேட்டபோது நான் மறுக்கவே செய்தேன். ஆனால் அவர் தொடர்ந்து அதை வெளியிட்டார். அது எனக்கு வேதனையை ஏற்படுத்தியது. அதன்பின் அதை கண்டுகொள்ளவில்லை என தெரிவித்திருந்தார்.
நிம்மதியை தேடி மகன்களுடன் தனுஷ் சென்ற இடம்: எங்க போயிருக்காரு தெரியுமா..?
இந்நிலையில் அண்மையில் மஞ்சிமா மோகன், விஷ்ணு விஷாலுடன் நடித்த ‘எப்.ஐ.ஆர்’ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் மனுஆனந்த் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இதனையடுத்து மனு ஆனந்திடம் உதவி இயக்குநர்களாக பணி புரியும் வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
View this post on Instagram A post shared by Manjima Mohan (@manjimamohan)
இந்த அறிவிப்பை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்த மஞ்சிமா மோகன், மனு ஆனந்திடம் உதவி இயக்குனராக சேர விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நான் ஏற்கனவே இதற்காக விண்ணப்பித்தேன் என்றும் ஆனால் என்னை வேண்டாம் என்று அவர் சொல்லிவிட்டார் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் மஞ்சிமா மோகன்.