தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான
தனுஷ்
, ஐஸ்வர்யா ஜோடி இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் திடீரென கடந்த ஜனவரி மாதம் பிரிய போவதாக அறிவித்தனர்.
அவர்களின் இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திற்கே பேரதிர்ச்சியாக அமைந்தது. விவாகரத்தை தொடர்ந்து மகன்கள் இருவரும் சில நாட்கள் தனுஷுடனும், சில நாட்கள் ஐஸ்வர்யாவுடனும் இருந்து வருகின்றனர். மேலும், தங்கள் பெற்றோர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என யாத்ரா, லிங்கா விரும்புவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்று இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியான ‘
ராக் வித் ராஜா
’ சென்னையில் நடந்தது. தீவிர
இளையராஜா
ரசிகரான தனுஷ் தனது மகன்களுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அவர் என்னை வேணாம்ன்னு சொல்லிட்டாரு: நடிகை மஞ்சிமா மோகன் வருத்தம்..!
இந்நிகழ்ச்சியில் ரஜினியின் ‘வள்ளி’ படத்தில் வரும் மெலோடி பாடலான ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடலை மகாராஷ்டிரா பாடகி விபவரி பாடினார். அதுவரை அரங்கம் அதிர ஆரவாரம் செய்து கொண்டிருந்த ரசிகர்கள், இந்த பாடலை கேட்டு மெய்மறந்து லயித்து போனார்கள். தனுஷும் இந்தப்பாடலை தன்னை மறந்து கேட்டு கொண்டிருந்தார்.
இந்த பாடல் முடிந்தவுடன், தனுசை எழுந்திருக்கும் படி கூறிய இளையராஜா, உனக்கு இந்த பாட்டு பிடிச்சிருக்கா என்று கேட்டார். தனுஷ் ஆமாம் என்று சொல்ல, இந்த பாடலின் மிகப்பெரிய வெற்றிக்கு, உங்க மாமனார்தான் காரணம் என்று கூறினார். இதனைக்கேட்ட தனுஷ் சிரித்துவிட்டு, தலை ஆட்டியபடி அமைதியாய அமர்ந்தார்.
சிவகார்த்திகேயன் படம் வரட்டும்; மேடையில் SK20 பற்றி பேசிய சத்யராஜ்!