`அபூர்வ ராகங்கள்' தெரியும், ரஜினியும் கமலும் இணைந்து நடித்த இந்தப் படங்கள் தெரியுமா? | Visual Story

ரஜினி – கமல், கே.பாலசந்தர்

அரை நூற்றாண்டாக சினிமாவில் கோலோச்சி வரும் ரஜினி – கமல் இரு துருவங்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டாலும் நண்பர்களான இருவரும் சில படங்கள் இணைந்து நடித்துள்ளனர். அது பற்றிய ஒரு சின்ன ரீவைண்ட்.

அபூர்வ ராகங்கள் (1975)

அபூர்வ ராகங்கள் (1975)

கே.பாலசந்தரின் படம். எப்போதாவது நிகழும் ‘அபூர்வ ராகம்’ போல காதல் என்பதே கதை. மரபு மீறிய உறவுகளைக் கையாண்ட விதம் சிறப்பாகப் பேசப்பட்டது. ரஜினி ஸ்ரீவித்யாவின் ஓடிப்போன கணவராகவும் கமல் காதலனாகவும் நடித்திருப்பார்கள்.

மூன்று முடிச்சு (1976)

மூன்று முடிச்சு (1976)

ஸ்ரீதேவி, கமல், ரஜினி காம்போவில் கே.பாலசந்தர் படம். ஸ்ரீதேவியைக் காதலிக்கும் கதாபாத்திரங்களாக ரஜினியும் கமலும். ‘வசந்த கால நதிகளிலே’ படகு காட்சி இந்தப் படத்தில்தான்.

பதினாறு வயதினிலே (1977)

பதினாறு வயதினிலே (1977)

சப்பாணி, பரட்டை, மயிலு வேடங்களில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடிக்க, கிராமத்து காவியமாக உருவான இது, இயக்குநர் பாரதிராஜாவை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

அவள் அப்படித்தான் (1978)

அவள் அப்படித்தான் (1978)

கமல், ரஜினி, ஸ்ரீபிரியா நடித்த படம். சி.ருத்ரய்யா இயக்கத்தில் வெளிவந்தது. கமல் – ரஜினி இருவேறு துருவங்களின் பிரதிபலிப்பாகக் காணப்படுவர்.

அவர்கள் (1977)

அவர்கள் (1977)

கமல், சுஜாதா, ரஜினி நடித்திருந்தனர். இயக்கம் கே.பாலசந்தர். கணவன், காதலன், மனைவி என முக்கோண காதல் கதை. இவர்களின் உறவுச் சிக்கலை பேசுகிற படமாக இது அமைந்தது.

ஆடு புலி ஆட்டம் (1977)

ஆடு புலி ஆட்டம் (1977)

இயக்கம் எஸ்.பி.முத்துராமன். ‘இதுதான் ரஜினி ஸ்டைல்’ என்கிற வசனம் முதன்முதலில் இடம்பெற்ற படம். படம் நெடுகிலும் இந்த வசனம் இடம்பெற்றிருக்கும்.

இளமை ஊஞ்சல் ஆடுகிறது (1978)

இளமை ஊஞ்சல் ஆடுகிறது (1978)

“கமல்ஹாசனும் ரஜினிகாந்த்தும் உடன் பிறப்புகள் மாதிரி இணைந்து நடித்திருக்கிறார்கள். நடிப்பைப் பொறுத்தவரை யார் யாரை மிஞ்சுகிறார் என்று தரம் பார்க்க முடியாதவாறு, இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள்.”

(1978 ஆனந்த விகடன் விமர்சனத்தில் இருந்து)

தப்புத் தாளங்கள் (1978)

தப்புத் தாளங்கள் (1978)

இந்தப் படத்திற்கும் இயக்கம் கே.பாலசந்தர்தான். கமல் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார். ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் எடுக்கப்பட்ட படம்.

தாயில்லாமல் நானில்லை (1979)

தாயில்லாமல் நானில்லை (1979)

ஆர்.தியாகராஜன் இயக்கம். கமல் – ஸ்ரீதேவி இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார்.

நினைத்தாலே இனிக்கும் (1979)

நினைத்தாலே இனிக்கும் (1979)

இயக்கம், கே.பாலசந்தர்தான். ‘எங்கேயும் எப்போதும்’, ‘சிவனே மந்திரம் சிவசம்போ’, ‘நம்ம ஊரு சிங்காரி’ எனப் படத்தின் பாடல்கள் பட்டையைக் கிளப்ப ரொம்பவே ஜாலியான படம்.

அலாவுதீனும் அற்புத விளக்கும் (1979)

அலாவுதீனும் அற்புத விளக்கும் (1979)

அலாவுதீனாக கமலும், பாக்தத்தின் தளபதி கமருதீனாக ரஜினியும் நடித்திருப்பார்கள். அதிர்ஷ்டமாகக் கிடைக்கும் விளக்கும் அலாவுதீனுக்குத் தொல்லை தரும் வில்லன்களும் என சாகசங்கள் நிறைந்த படம்.

Geraftaar (1985)

Geraftaar (1985)

ரஜினியும் கமலும் இணைந்து நடித்த படங்கள் 16. அமிதாப் பச்சன் உடன் இருவரும் இணைந்து நடித்த இந்த இந்தி படமும் அவற்றில் ஒன்று. ரசிகர்களின் ஆரவாரத்தோடு இவர்களின் பயணம் அதன் பிறகு தனித்தனியாக தொடர்ந்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.