தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23: சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க 2 சிறப்பு மண்டலங்கள்

சென்னை: சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இரண்டு “சிறுதானிய சிறப்பு மண்டலங்கள்” உருவாக்கப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருச்சி, கரூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டும் உருவாக்கப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர்நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து, தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்: >அளவில் சிறுத்து, ஊட்டத்தில் பெருத்து, உடலை உறுதியாக்குபவை சிறுதானியங்கள். அவற்றை வழி மொழியும் வகையில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, 2023 ஆம் ஆண்டினை “சர்வதேச சிறுதானிய ஆண்டாக” அறிவித்துள்ளது.

> சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இரண்டு ”சிறுதானிய சிறப்பு மண்டலங்கள்’‘ திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருச்சி, கரூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டும் உருவாக்கப்படும்.

> சிறுதானிய ஊட்டச்சத்துக்கள் பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், விவசாயிகள், தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ நிறுவனங்கள், நுகர்வோர் பங்கேற்கும் “சிறுதானிய திருவிழா” மாநில, மாவட்ட அளவில் நடத்தப்படும்.

> சாகுபடி முதல் மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது வரை அனைத்து உதவிகளையும் ஒருசேர வழங்கிடும் வகையில், 2022-23 ஆம் ஆண்டில் 92 கோடி ரூபாய் மத்திய, மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

> மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சிறுதானிய சாகுபடி, சிறுதானிய உணவு ஆகியவற்றை சுய உதவிக்குழு மகளிரிடையே ஊக்குவிக்கும் வகையில் 500 குறு விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

> பயறு பெருக்கத் திட்டம்: பயறுவகை உற்பத்தியில் தன்னிறைவை அடையும் பொருட்டு, துவரை உற்பத்தியை அதிகரித்தல், பயறுவகைகளைத் தரிசு நிலங்களில் சாகுபடியை அதிகரிக்க கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களைக் கொண்ட “துவரை சாகுபடி சிறப்பு மண்டலம்” அமைக்கப்படும்.

> அறுவடைக்குப் பின் பயறுவகைகளை சுத்தப்படுத்தி, மதிப்புக்கூட்டி, விற்பனை செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 2022-23 ஆம் ஆண்டில் 60 கோடி ரூபாய் மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.