இந்த பயணத்திற்கு முன்பாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறுகையில், ” உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு இந்த பயணத்துடன் ஒத்துப்போகிறது. இதனால், சர்வதேச ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், ஜப்பானும் இந்தியாவும் பல்வேறு விஷயங்களில் இணைந்து செயல்படும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவுடனான பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதையும் பிரதமர் கிஷிடா நோக்கமாகக் கொண்டுள்ளார் என்றும், இந்த பயணத்தின்போது அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் திட்டத்தை அவர் அறிவிப்பார் என்று ஜப்பானின் செய்தித்தாள் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்..
உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 3 ரஷிய வீரர்கள் சென்றனர்