செங்கல்பட்டு மாவட்டத்தில் திருடுபோன மற்றும் தவறவிடப்பட்ட சுமார் 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் போலீசாரால் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
கடந்த ஓராண்டில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திருடுபோன, தவறவிடப்பட்ட 176 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்ட நிலையில், அவை செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி அரவிந்தன் தலைமையில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.