இந்தியாவின் சட்டப்பூர்வமான எரிபொருள் பரிவர்த்தனைகள் அரசியலாக்கப்படக் கூடாது என்று வெள்ளிக்கிழமை மத்திய அரசு மேற்கு நாடுகளைத் தாக்கி பேசியுள்ளது.
கச்சா எண்ணெய் தேவையைச் சொந்த நாட்டின் உற்பத்தி வாயிலாகத் தீர்த்துக்கொள்ளும் நாடுகள் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி நாடுகள் கட்டுப்பாட்டுத்தப்பட்ட எண்ணெய் வர்த்தகம் குறித்துப் பிற நாடுகளுக்கு அறிவுரை கூறக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.
இந்தியன் ஆயில் கார்பரேஷன்
இந்தியாவின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் கடந்த வாரம் Russian Urals oil-ஐ 20-25 டாலர் தள்ளுபடியில் 3 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்-ஐ ஜெனிவா வர்த்தக நிறுவனமான VITOL-யிடம் இருந்து வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பதிலடி
ரஷ்யா, உக்ரைன் மீதான போர் தொடர்ந்த பின்பு இந்தியா முதல் முறையாகக் கச்சா எண்ணெய்யை வாங்கியுள்ளது. இந்த வர்த்தகம் குறித்து அமெரிக்க அரசு கேள்வி எழுப்பிய போது, இந்தியா எவ்விதமான விதிமீறல்களையும் செய்யவில்லை என்பதை உறுதி செய்த போது இதை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்ய எண்ணெய்
ரஷ்யா இதுவரை மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவிற்கு ஒரு நாளைக்கு 360,000 பேரல் எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளது, இது 2021 சராசரியை விடக் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும்.
தினமும் 203,000 பேரல்
தற்போதைய ஏற்றுமதி அட்டவணையின் அடிப்படையில், ரஷ்யா ஒரு நாளைக்கு 203,000 பேரல் கச்சா எண்ணெய் ஒரு மாதம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் பாதையில் உள்ளது என்று Kpler என்னும் கமாடிட்டி தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிசக்தி தேவை
இந்தியா தனது எரிசக்தி தேவைகளைப் பூர்த்திச் செய்ய அதிகளவில் இறக்குமதியை மட்டுமே சார்ந்துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 85 சதவீதம் இறக்குமதி வாயிலாகப் பூர்த்திச் செய்கிறது. அப்படியானால் ஒரு நாளைக்கு 5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டும்.
வளைகுடா நாடுகள்
இந்தியா தனது பெரும்பாலான இறக்குமதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது ஈராக் 23%, சவூதி அரேபியா 18%, ஐக்கிய அரபு நாடுகள் 11%, இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இந்தியா தற்போது இறக்குமதி செய்து வருகிறது.
அமெரிக்கா
அமெரிக்காவும் இப்போது இந்தியாவிற்கு (7.3%) முக்கியமான கச்சா எண்ணெய் ஆதாரமாக மாறியுள்ளது. நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதிகள் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அநேகமாக இதன் அளவீடு 11 சதவீதமாக உயர வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் மொத்த சந்தைப் பங்கு 8% ஆக இருக்கும்.
Oil-sufficient countries need not advise on Russian imports, says India
Oil-sufficient countries need not advise on Russian imports, says India மேற்கத்திய நாடுகளுக்குச் சரியான பதிலடி கொடுத்த இந்தியா..!