உலகை அச்சுறுத்தும் ரஷ்யாவின் exoskeleton உடை: அதிர்ச்சியில் உறைந்து போன உக்ரைன்!


ரஷ்யா உலகின் மிக பயங்கரமான “எக்ஸோஸ்கெலட்டன்”(exoskeleton) உடைகளை அந்த நாட்டு வீரர்களுக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

உக்ரைனில் ரஷ்யா தனது போர் தாக்குதலை மிகவும் தீவிரமான முறையில் நான்காவது வாரமாக தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனிடையே ரஷ்ய வீரர்களுக்கு மிகவும் கொடூரமான “எக்ஸோஸ்கெலட்டன்”(exoskeleton) உடைகளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை நடைபெற்று வரும் உக்ரைன் போரில் இந்த உடைகள் பயன்படுத்தப்பட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில், இந்த கவச உடையானது எதிராளிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கவல்லது என தெரிவந்துள்ளது.

இந்த “எக்ஸோஸ்கெலட்டன்”(exoskeleton) உடைகள் ராணுவ வீரர்கள் அதிக எடையுள்ள சுமைகளை சுமந்து செல்ல உதவும் எனவும், மிக நீண்ட தூரங்களுக்கு ரஷ்ய வீரர்கள் பயன்படுத்தும் இயந்திர துப்பாக்கிகளுக்கு ஆபத்தான துல்லியத்தை வழங்கவல்லது
எனவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய இராணுவ பாதுகாப்பு ஒப்பந்தத்தாரர் TsNiiTochMash ஐச் சேர்ந்த Oleg Faustov என்பவர் தெரிவித்துள்ள கருத்தில், இந்த உடைகள் சாதாரண மனிதப் படை வீரர்களை மிகவும் ஆபத்தானதாக மாற்றி படைவீரர்களின் உடல் திறனை பல மடங்கு மேம்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த எக்ஸோஸ்கெலட்டன் உடைகள் ராணுவ வீரர்களை கணினியின் துல்லியத்துடன் கூடிய இயந்திர மனிதர்களாக மற்றும் என தெரிவித்துள்ளார்.

இத்தகையக நவீன ஆயுதங்கள் ஏற்கனவே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் முன்பு சோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.   

உக்ரைன் மீது ரஷ்யா பயன்படுத்திய பயங்கர ஆயுதம்: பாதுகாப்பு அமைச்சகம் பகீர் தகவல்!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.