நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பீஸ்ட்’ படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அனிருத் இசையில் வெளியான படத்தின் முதல் சிங்கிள் ‘அரபிக் குத்து’ பாடல் வைரலானது. இதனையடுத்து அதன் இரண்டாவது சிங்கிளான ‘ஜாலியோ ஜிம்கானா’ (Jolly O Gymkhana) பாடல் இன்று வெளியாக இருக்கிறது.
இதே பூஜா ஹெக்டே, ‘பாகுபலி’ பிரபாஸுடன் நடித்த பிரமாண்ட படமான ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் எதிர்பார்த்தளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. பூஜா ஹெக்டே சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “ஒவ்வொரு படத்திற்கும் அதற்கேற்ற விதி இருக்கும்” என்று ‘ராதே ஷ்யாம்’ குறித்து தெரிவித்திருக்கிறார்.
பூஜா ஹெக்டே, டாக்டர்.பிரேர்னா என்ற கதாபாத்திரத்தில் அந்தப் படத்தில் நடித்திருந்தார். படத்தின் கதையைப் பற்றி விமர்சனங்கள் எழுந்தாலும் பூஜாவின் நடிப்புக்கு பாராட்டுகள் வந்தன. “‘நீ அழகாக இருக்கிறாய்’ என்பது போலான விமர்சனத்தைத் தாண்டி என்னுடைய நடிப்பைப் பற்றி மக்கள் பேசுவது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது” என்கிறார் பூஜா.
ராதே ஷ்யாம் எதிர்பார்த்த அளவிற்குப் போகவில்லையே எனக் கேட்ட போது, “சில நேரங்களில் ஒரு படம் சுமாராக இருப்பதாக உங்களுக்குத் தோன்றும். ஆனால் அந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் இடம்பெற்றிருக்கும். சில நேரங்களில் பாக்ஸ் ஆபிஸில் இடம்பெறாத படம் நீங்கள் பார்க்கும் போது ‘இந்தப் படம் எப்படி ஹிட்டாகாமல் போனது’ என ஆச்சரியப்படுவீர்கள். ஒவ்வொரு படத்திற்கும் அதற்கேற்ற விதி என ஒன்று இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதுதான் இந்தப் படத்திலும் நடந்திருக்கிறது” என்றார்.
பூஜா ஹெக்டே தற்போது சீரஞ்சீவி, மகேஷ் பாபு, ராம்சரண் உள்ளிட்ட தெலுங்கு சினிமா ஸ்டார்களுடனும், தமிழில் விஜய்க்கு ஜோடியாக நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்திலும் பயங்கர பிஸியாக இருக்கிறார்.
அதே பேட்டியில், ‘பீஸ்ட்’ பட அனுபவம் பற்றிக் கேட்டுவிட்டு, விஜய்யைக் குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுமாறு கேட்ட போது, “தளபதி விஜய் செம கூல்” எனப் பதிலளித்திருக்கிறார் பூஜா.