சிம்பு தொகுத்து வழங்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியேற உள்ள பிரபலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 14 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகின்றது.
தொகுப்பாளாராக சிம்பு
ஆரம்பத்தில் கமல் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியினை கடந்த 3 வாரங்களாக சிம்பு தொகுத்து வழங்குகின்றார். இந்த வாரம் மக்களின் வாக்குகளின் படி சிம்புவால் வெளியேற்றப்படும் நபர் யார் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த வாரம் எவிக்ஷனில் ஜுலி, தாமரை, நிரூப், சதீஷ், அனிதா, சுருதி ஆகியோர் உள்ள நிலையில், முதல் நான்கு பேரும் அடுத்தடுத்த இடங்களில் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் கடைசி இரண்டு இடங்களில் அனிதா சுருதி இருவர் உள்ளனர்.
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெள்ளரிக்காயில் பக்கவிளைவா? அதிர்ச்சி தகவல்
வெளியேறப்போவது யார்?
அனிதா கடந்த வாரம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி மக்களிடையே வெறுப்பை சம்பாதித்ததால் அவர் தான் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறுவார் என பிக்பாஸ் ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.
ஆனால் அனிதா சுருதியை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளதால், இந்த வாரம் சுருதி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.