Tamilnadu Agri Budget Highlight Update : தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டுக்காக பட்ஜெட் தொடர் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் முதல் நாளான நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து விளக்கம் அளித்திருந்த நிலையில், பட்ஜெட் கூட்த்தொடரின் 2-வது நாளான இன்று வேளான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளான்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
கர்நாடகா ஆந்திராவை தொடர்ந்து தமிழகத்தில் வேளான்துறைக்கு தனி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் :
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ், கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு இலவசமாக தென்னங்கன்று வழங்குவதோடு பப்பாளி. எலுமிச்சை முருங்கை, கருவேப்பிலை போன்ற தோட்டக்கலை செடிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு, ஊரக பகுதிகளில், ஊட்டச்சத்து பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் என்ற திட்டத்தில் 132 கோடி மதிப்பீட்டில் 7 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரபரபளவில், 3 ஆயிரம் மானாவாரி நிலத்தொகுப்புகள் உருவாக்கப்படும்.
பயிர் காப்பீடு திட்டத்திற்காக தமிழக அரசு சார்பில் 2399 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநில வேளான் வளர்ச்சித்திட்டத்திற்காக நடப்பு ஆண்டில், 71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் உள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதற்கும், நச்சற்ற நோய் எதிர்ப்பு சக்தி தரும் காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்திடவும், இயற்கை வேளான்மையை ஊக்குவிக்க 4கோடி ரூப் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அறுவடை செய்த விளை பொருட்களை இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாக்க, உலர் களமாக பயன்படுத்துவதற்கு 60 ஆயிரம் விவசாயிகளுக்கு 5 கோடி செலவில் தார்பாய்கள வழங்கப்படும்.
தென்னை, மா, முந்திரி போன்ற பல்லாண்டு பயிர்களில் ஊடுபயிர் சாகுபடி குறித்து செயல் விளக்க திட்டம் அமைப்பதற்காக 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்பட்டு, விதைப்பண்னைகளில் 200 ஏக்கரில் விதை உற்பத்தி செய்யப்பட்டு சுமார் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகிக்க 71 லட்ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2022-23-ம் நிதி ஆண்டில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், செம்மரம், சந்தம், மகோகனி தேக்கு போன்ற மதிப்பு மிக்க மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு மானிய விலையில், வழங்கி மரம் சார்ந்த விவசாயம் ஊக்குவிக்கப்படும்
சாகுபடியுடன், கறவைமாடு, ஆடுகள், நாட்டுக்கோழிகள், தீவனப்பயிர், மரக்கன்று, தேனீ வளர்ப்பு மண்புழு உர தயாரிப்பு, ஊட்டச்சத்து தோட்டம் ஆகிய வேளான் தொடர்பான பணிகளையம் சேர்த்து, மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒரு தொகுப்பிற்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் வீதம் 13 ஆயிரம் ஒருங்கினைந்த பண்ணைய தொகுப்புகள் 65.65 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
எண்ணெய் வித்துக்கள் பயிர்களின் பரப்பு உற்பத்தி பெருக்க திட்டத்திற்கு 28.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
மல்லிகை, சம்பங்கி, சமந்தி ரோஜா உள்ளிட்ட மலர்கள் சாகுபடிக்கு 4250 ஏக்கர் நிலம் ஒதுக்கி அதில், 5.37 கோடி நிதியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
விவசாயிகளுக்கு தேவையான வேளான் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானிய விலையில், பெற்று நிகர வருவாயை அதிகரிக்க 6357 தனிப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
5000 விவசாயிகள் பயன்பெரும் வகையில் புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு ரூ 10 ஆயிரம வரை மானியம வழங்க 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வரின் சூரியகாந்தி இயக்க சக்தியினால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்கும் திட்டத்தில், 10 குதிரைத்திறன் வரையிலான தனித்து சூர்ய சக்தியால் இயங்கும் 3000 பம்புசெட்டுகள் அமைப்பதற்கு 70 சதவீத மானியம் வழங்க 65.34 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளான் துறையில் உள்ள இயங்நிதிரங்களையும் கருவிகளையும் பழுதுபார்க்கும் வகையில், 3 நடமாடும் பழுது நீங்கும் வானங்கள் அமைக்கவும், 3.54 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2022-23 ஆண்டில், 10 லட்சம் பனைவிதைகள விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் முருங்கை நாற்றங்கால் அமைக்கப்பட்டு முருங்கை சாகுபடி ஊக்குவிக்கப்படும்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க 5157 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கருப்பட்டி உட்பட பனை சார்ந்த மதிப்புக்கூட்டுப்பொருட்கள் உற்பத்திக்கு ரூ 75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை டன்னுக்கு 195 ரூபாய் உயர்த்தி தரப்படும்.
உழவர் சந்தைகளில் காய்கறி வரத்தை அதிகரிக்க ரூ 5 கோடி ஒதுக்கீடு
பருவம் இல்லாத தக்காளியை சாகுபடியை ஊக்குவிக்க 4 கோடி ஒதுக்கப்படும்
7500 ஏக்கரில் இயற்கை வேளான்மை சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.
சிறதானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இரண்டு மண்டலங்கள் உருவாக்கப்படும்.
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி மாணவ மாணவியர் விடுதியில், காய்கறி பழங்கள், மூலிகை தோட்டங்கள் அமைக்கப்படும். மாணவர்கள் இதன் மூலம் விவசாயம் பற்றி அறிந்துகொள்வார்கள்.
“ “