சீர்காழி அருகே கூழையார் ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகத்தில் பராமரிக்கப்பட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரியவகை ஆலிவர் ரெட்லி ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு முதல் திருமுல்லைவாசல் வரையிலான கடலோரப் பகுதிகளில் சேகரிக்கப்படும் ஆமை முட்டைகள், கூழையார் கிராமத்தில் உள்ள பொறிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொறிப்பகத்தில் பராமரிக்கப்பட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகளில் இருந்து அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் வெளிவந்தன. இதையடுத்து, அவற்றை பத்திரமாக கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த வகை ஆமைகள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இனப்பெருக்கத்திற்காக மீண்டும் இதே கடற்பகுதிக்கு வரும் என கடல்வாழ் ஆர்வலர்களும், வன உயிரின காப்பாளர்களும் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM