மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் : மிதாலி ராஜ் புதிய சாதனை

ஆக்லாந்து,
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆக்லாந்தில் நடைபெற்ற  18-வது லீக் ஆட்டத்தில்  ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி மோதியது.ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது.  278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி  49.3 ஓவர் முடிவில்  4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்து. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார் . இதனால் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் (12) அதிகமுறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த  நியூசிலாந்தின் டெபி ஹாக்லியின் சாதனையை சமன் செய்துள்ளார் 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.