மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் போர் தெஹ்சிலில் உள்ள கசுர்டி கிராமத்திற்கு அருகில் கார் பராமரிப்பு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த உற்பத்தி ஆலையின் ஒரு பிரிவில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், 6 தீயணைப்பு மீட்பு வாகனங்களுடன் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்குள் தீ மளமளவெனப் பரவி கரும்புகையை வானோக்கி கக்கி வருகிறது.
மேலும், இந்த தொழிற்சாலையில் கார் பராமரிப்பு பொருட்கள் எரிந்து நாசமாயின. சில வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்கள் ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததால் அது வெடித்து தீ வேகமாக பரவியதாகவும், இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவுமில்லை என்றும் தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்.. ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா டெல்லி வருகை- பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை