பெல்ஜியம்
நாட்டில் ஹெரெண்டல்ஸ் பகுதியில் வசித்து வந்த மரியா வெர்லிண்டன் (57) என்ற ஆசிரியை கடந்த 2020 நவம்பர் மாதம், தமது வீட்டில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார், ஆசிரியையின் உடம்பில் 101 முறை கத்திய குத்தப்பட்ட காயங்கள் இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இவ்வளவு கொடூரமான முறையில் கொலை செய்த சைக்கோ யார் என்று 100க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் கொலையாளியை அவர்களால் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் ,கொலை நடந்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஓடிப்போன நிலையி்ல் சமீபத்தில் இந்த வழக்கிவ் துப்பு துலங்கியது. அதனை வைத்து ஆசிரியை மரியாவை கொலை செய்து 37 வயதான வாலிபர் என்பதும், அவர் அந்த ஆசிரியையின் முன்னாள் மாணவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
மார்ச் 22 வரை மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் அதிரடி உத்தரவு!
கன்டர் உவென்ட்ஸ் என்ற அந்த வாலிபர், தனது 7 வயதில் பள்ளியில் படித்தபோது அவருக்கு மரியா வெர்லிண்டன் ஆசிரியராக இருந்துள்ளார். அப்போது கன்டர் உவென்ட் செய்த தவறுக்காக, ஆசிரியை மரியா வகுப்பில் அவரை கொஞ்சம் கடுமையாக கண்டித்துள்ளார்.
மற்ற மாணவர்களின் முன் தம்மை ஆசிரியர் திட்டியதை அவமானமாக கருதிய உலென்ட், அந்த சம்பவத்தை மனதில் வைத்து கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு கழித்து ஆசிரியை மரியாவை மனசாட்சியே இல்லாமல் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார்.