சென்னை: தனி பட்ஜெட் மூலம் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குறிப்பிட்டிருக்கிறார். வேளாண்மைக்கென மொத்தம் ரூ.33,007 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு விவசாயிகள் நலன்சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் கே.எஸ். அழகிரி வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.