உத்தர பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் ரோஜா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்ரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்வதி (70). இவரது மகன் ராம் நரேஷ் (35). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று இரவு ராம் நரேஷ் தனது தாயிடம் மதுபானம் குடிக்க பணம் கேட்டு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ராம்வதி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நரேஷ் ராம்வதியை அடித்து தாக்கியுள்ளார். இதில் ராம்வதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், ராம்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றம்சாட்டப்பட்ட ராம் நரேஷை கைது செய்தனர்.
மதுபானத்திற்காக தாயையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்.. வெளிநாட்டு பெண்ணை மசாஜ் செய்வதாக கூறி கற்பழித்த வாலிபர் கைது