புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளையை, தீயணைப்புத் துறையினர் கயிறுக் கட்டி பத்திரமாக மீட்டனர்.
அரசடிப்பட்டி பகுதியில், கோவில் திருவிழாவை முன்னிட்டு முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற ராஜாப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா என்பவரது காளை, மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்றது.
திமிறிச் சென்ற வேகத்தில், மாடுகள் வெளியேறும் பகுதியான கலக்சன் பாயிண்ட்டுக்கு அருகிலேயே இருந்த ஆழம் குறைந்த கிணற்றுக்குள் காளை தவறி விழுந்தது.
கிணற்றில் தண்ணீர் இல்லாத பகுதியில் காளை நின்றிருந்த நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்புதுறையினர், ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் போராடி கயிறுக் கட்டி காளையை மீட்டனர்.