பிரதமர் புமியோ கிஷிடோ பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 3 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
2 நாள் பயணமாக இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோவை, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி வரவேற்றார்.இதையடுத்து, இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்தியா – ஜப்பான் இடையேயான 14ஆவது வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்றது.
பின்னர், இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியா – ஜப்பான் இடையிலான கூட்டுறவை வலுப்படுத்துவது, இந்தோ – பசிபிக் பிராந்தியத்திலும், உலக அளவிலும் அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும் என்றார்.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், சர்வதேச சட்டங்களை பின்பற்றி அமைதிக்கான தீர்வு எட்டப்பட வேண்டுமென்றும் ஜப்பான் பிரதமர் குறிப்பிட்டார்.