சாதாரண 72 செண்ட் நிலப்பிரச்னை! ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு நேர்ந்த கொடூரம்

இடுக்கியில் நிலத்தகராறு காரணமாக மனைவி மற்றும் மகன், இரண்டு மகள்கள் உட்பட 4 பேரை வீட்டுக்குள் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார்.
தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே சீனிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹமீது (79) இவரது மனைவி ஷீபா, மகன் ஃபைசல், மகள்கள் மெஹர், அஸ்னா ஆகியோருடன் சீனிக்குழி பகுதியில் உள்ள ஒரு வீட்டில வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஹமீதுக்கும் அவரது மகன் ஃபைசலுக்கும் இடையே சில மாதங்களாகவே நிலத் தகறாறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதாவது தந்தை ஹமீதுக்கு சொந்தமான 72 செண்ட் நிலத்தில் விவசாயம் செய்து கொள்ள மகன் ஃபைசலிடம் தெரிவித்திருக்கிறார். இதற்காக தனது நிலத்தை மகன் ஃபைசல் பெயருக்கு பட்டா மாறுதலும் செய்துள்ளார்.
image
ஆனால், விவசாயத்தில் நாட்டமில்லாத ஃபைசல் விவசாய நிலத்தை சரிவர கவனித்துச் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் விவசாயத்தை நான் செய்து கொள்கிறேன் என ஹமீது தனது மகன் ஃபைசலிடம் கேட்டுள்ளார். ஆனால் ஃபைசல் பதில் சொல்லாததால் ஹமீது நிலத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.
ஆனால், தந்தைக்கு நிலத்தை திருப்பித் தர மறுத்ததால் மகன் ஃபைசல் மீது ஹமீதுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்து தகராறாகி அது மோதலாகவும் மாறி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து குடும்பமே தேவையில்லை என முடிவு செய்திருக்கிறார் ஹமீது.
image
இந்நிலையில் இரவு சாப்பாடு முடிந்து வீட்டில் அனைவரும் உறங்கிய நிலையில், அசந்து உறங்கும் அதிகாலை நேரம் எழுந்த தந்தை ஹமீது, மகன் ஃபைசல், அவரது மனைவி ஷீபா, மகள்கள் மெஹர், அஸ்னா ஆகியோர் நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை அறிந்த ஹமீது, யாரும் வெளியில் சென்று விடாதவாறு அனைத்து கதவுகளையும் பூட்டிவிட்டு வெளியே வந்துள்ளார்.
பின்னர், தான் தயாராக வைத்திருந்த பெட்ரோலை கதவு இடைவெளி வழியே வீட்டுக்குள் ஊற்றி தீ வைத்துள்ளார். இதையடுத்து வீட்டிற்குள் தீ பரவியதை உணர்ந்த வீட்டிற்குள் இருந்த நால்வரும் வர முயற்சித்துள்ளனர். ஆனால் கதவுகள் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியே கூக்குரல் இட்டும் கதறி துடித்தும் உதவிக்காக சுற்றத்தாரை உயிர் போராட்ட வெறியோடு அழைத்துள்ளனர்.
image
ஆனால் வெளியே நின்றிருந்த தந்தை ஹமீது உதவி செய்ய வருபவர்களையும் தீ வைத்து கொன்றுவிடுவேன் என தான் மீதம் வைத்திருக்கும் பெட்ரோல் பாட்டிலை காட்டி மிரட்டி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுற்றத்தார் செய்வது அறியாது திகைத்து நின்றுள்ளனர். நிலைமையை சமாளித்து எவராலும் உரிய நேரத்தில் வந்து உதவி செய்ய முடியாததால், படிப்படியாக வீட்டிற்குள் இருந்து வரும் மரண ஓலம் குறைந்து ஓய்ந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இடுக்கி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்துள்ளனர். ஆனால், வீட்டிற்குள் இருந்த நால்வரும் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஹமீது திருவிழா போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் நடத்திய விசாரணையில் நிலத்தகராறு காரணமாக குடும்பத்தை தீயிட்டுக் கொளுத்தியதை ஹமீது ஒப்புக்கொண்டார்.
image
சாதாரண நில பிரச்னைக்காக கட்டிய மனைவி பெற்ற மகன் மகள் ஆகியோரை வீட்டுக்குள் அடைத்து உயிரோடு தீயிட்டுக் கொளுத்திய அதிர்ச்சி சம்பவம் இடுக்கியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.