மயிலாடுதுறை அருகே குடிநீரில் ஓ.என்.ஜி.சி எண்ணெய் கலந்து வருவதால் 15க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுக்குப்போக்கு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
குத்தாலம்,சேத்திரபாலபுரம் பிரதான சாலையில் ஓஎன்ஜிசியின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஒருங்கிணைந்த சேமிப்பு நிலையம் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணறுகளில் எடுக்கப்படும் எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய்கள் வழியாக இங்கு ஒருங்கிணைக்கப்படுகிறது.
இந்த சேமிப்பு நிலையத்துக்கு எதிரேயுள்ள ராமாமிர்தம் தெரு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அண்மைக்காலமாக இங்கு குடிநீர் காவி நிறத்தில் வருவதாகக் கூறப்படுகிறது.
அதனை அருந்திய 15க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும் குழந்தைகளுக்கு தோல் நோய் ஏற்பட்டுள்ளதாகவும் இப்பகுதியினர் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.