ஒரு லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை இன்று விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட எரிவாயு, கெரவலபிட்டிய எரிவாயு களஞ்சிய கட்டடத் தொகுதியில் வெற்றிகரமாக இறக்கப்பட்டுள்ளது. எரிவாயு இறக்குமதி செய்யப்பட்ட ஓமான் நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்ட கொடுப்பனவை செலுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டது.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நேற்று நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், எதிர்வரும் சில தினங்களில் கேஸுக்கான தட்டுப்பாடு நீங்கிவிடும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதேவேளை, எரிபொருள் விநியோகப் பணிகள் வழமையான முறையில் இடம்பெற்று வருவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். தேவையான எரிபொருள் நாட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மண்ணெண்ணெயை விற்பனை செய்யும் எரிபொருள் நிலையங்களுக்கு ஆகக் கூடுதலான வகையில், அவை விநியோகிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு இல்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.