இந்தியா-வங்காளதேச எல்லை பகுதியில் சீனாவின் ஆளில்லா குட்டி விமானமான ட்ரோன் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் எல்லைக்கு அருகில் உள்ள புர்பாபரா கிராமத்தில் வயல் பகுதியில் கிடந்த அந்த ட்ரோனை பங்கஜ் சர்க்கார் என்ற விவசாயி எடுத்துள்ளார்.
பின்னர் அதை பட்ரபோல் காவல் நிலையத்தில் அவர் ஒப்படைத்தார். இது குறித்து அறிந்த பி.எஸ்.எஃப் படையினரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். S500 மாடல் எண் கொண்ட அந்த ட்ரோனை உரிமை கோ யாரும் முன்வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்வதேச எல்லையில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள இந்தியப் பகுதியில் இந்த ட்ரோன் கிடந்துள்ளதால் தடயவியல் விசாரணை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பை மீறுவதற்கான சதியா அல்லது எல்லை தாண்டியகடத்தலுக்கான சதியா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்… ‘
ஒரு அணி- ஒரு திட்டம்’: இந்தியா- ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை